TNPL 2025: ஜெகதீசன், அபராஜித் அதிரடி அரைசதம்: திண்டுக்கலுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக்

பாபா அபராஜித் 67 ரன்களிலும் ஜெகதீசன் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
TNPL 2025: ஜெகதீசன், அபராஜித் அதிரடி அரைசதம்: திண்டுக்கலுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சேப்பாக்
Published on

திண்டுக்கல்:

9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆஷிக் மற்றும் மொஹித் ஹரிகரன் களமிறங்கினர். இதில் மொஹித் 4 ரன்களிலும், ஆஷிக் 8 ரன்களிலும் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினர். இதனையடுத்து கேப்டன் பாபா அபராஜித் - ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பாபா அபராஜித் 67 ரன்களிலும் (44 பந்துகள்), ஜெகதீசன் 81 ரன்களிலும் (41 பந்துகள்) ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விஜய் சங்கர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் தரப்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com