டிஎன்பிஎல் கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்தியது நெல்லை

சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்களை விளாசினார்.
Nellai Royal Kings
Published on

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றின் கடைசி கட்ட போட்டிகள் திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய திண்டுக்கல் அணி 19.4 ஓவர்களில் 136 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தது. திண்டுக்கல் அணிக்கு சிவம் சிங் 59 பந்துகளில் 70 ரன்களையும், அஸ்வின் 13 பந்துகளில் 15 ரன்களையும் சரத் குமார் 8 பந்துகளில் 9 ரன்களையும் எடுத்தனர்.

நெல்லை சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோனு யாதவ் 3.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹரிஷ் மற்றும் சிலம்பரசன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

எளிய இலக்கை துரத்திய நெல்லை அணி 17.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. நெல்லை சார்பில் அருண் கார்த்திக் 45 ரன்கள், அஜிதேஷ் 43 ரன்கள் மற்றும் என்எஸ் ஹரிஷ் 22 ரன்களை விளாசினர்.

திண்டுக்கல் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ரவிசந்திரன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், திரன் 1 விக்கெட் வீழ்த்தினர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com