டிஎன்பிஎல் கிரிக்கெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற திருப்பூர்

டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்களை விளாசினார்.
ITT Won
IDTT Won
Published on

டிஎன்பிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று வருகின்றன. நேற்றிரவு நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

பேட்டிங்கை தொடங்கிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை குவித்தது. இந்த அணியின் ராதாகிருஷ்ணன் 35 பந்துகளில் 50 ரன்கள், துஷார் ரஹேஜா 13 பந்துகளில் 41 ரன்கள் மற்றும் எஸ் கணேஷ் 25 பந்துகளில் 36 ரன்களை விளாசினர். நெல்லை சார்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டுகளையும், இமானுவேல் செரியன் மற்றும் சோனு யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்திய நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. கடைசி ஓவர் வரை சென்ற போட்டியில் திருப்பூர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நெல்லை அணிக்கு ரித்திக் ஈஸ்வரன் 35 பந்துகளில் 59 ரன்கள், அருண் கார்த்திக் 36 பந்துகளில் 51 ரன்கள், சோனு யாதவ் 23 பந்துகளில் 40 ரன்களை எடுத்தனர். திருப்பூர் அணிக்கு நடராஜன் 4 விக்கெட்டுகளையும், ராமலிங்கம் ரோகித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com