கோலாகலமாக தொடங்கியது டிஎன்பிஎல்... முதல் ஆட்டத்தில் திருப்பூர் அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கோவை

அபாரமாக ஆடிய சாய் சுதர்சன் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்
Published on

டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது சீசன் இன்று கோவையில் கோலாகலமாக தொடங்கியது. கோவையில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த கோவை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. துவக்க வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்த நிலையில், மூன்றாவது வீரராக களமிறங்கிய சாய் சுதர்சன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தார். அரை சதம் கடந்த அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் விளாசினார்.

முகிலேஷ் 33 ரன்கள், கேப்டன் ஷாருக் கான் 25 ரன்கள் சேர்த்தனர். திருப்பூர் அணி தரப்பில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாய் கிஷோர் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com