டிஎன்பிஎல்: கோவை கிங்ஸ் வெற்றி பெற 118 ரன்கள் நிர்ணயித்தது திருச்சி

அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 58 ரன்கள் சேர்த்தார்.கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கங்கா ஸ்ரீதர் ராஜூ, மணிமாறன் சித்தார்த்
கங்கா ஸ்ரீதர் ராஜூ, மணிமாறன் சித்தார்த்
Published on

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்றுவரும் 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.

கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com