டிஎன்பிஎல் 2026: துஷார் ரஹேஜா அதிரடி சதத்தால் சேப்பாக்கத்தை வீழ்த்தியது திருப்பூர்

முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 205 ரன்கள் குவித்தது.
tushar raheja
Published on

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 10-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. வரும் 28-ம் தேதி வரை இரு கட்டமாக இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17-ம் தேதி ஓய்வு தினமாகும்.

முதல் கட்ட போட்டிகள் வரும் 15-ம் தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடக்கின்றன.

இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி திண்டுக்கல்லில் இன்று நடைபெறுகிறது. இதில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

சதத்தை தவறவிட்ட ஆஷிக்

அதன்படி, முதலில் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது.

ஆஷிக் அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஷிக் 56 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 98 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜெகதீசன் 27 ரன்னில் அவுட்டானார்.

திருப்பூர் தமிழன்ஸ் அணி சார்பில் மோகன் பிரசாத், சிலம்பரசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

சதமடித்த துஷார் ரஹேஜா

இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே திருப்பூர் அணி அதிரடியாக ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் துஷார் ரஹேஜா சிக்சர், பவுண்டரிகளாக விளாசி சதமடித்து அசத்தினார். அவர் 52 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவருக்கு பிரதோஷ் ரஞ்சன் பால் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 பந்தில் ச் சிக்சர், 9 பவுண்டரி உள்பட 73 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில், திருப்பூர் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வென்றதுடன், நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 2வது தோல்வி ஆகும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com