5-வது டெஸ்ட்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய வீரர்கள் சந்திப்பு

5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது.
5-வது டெஸ்ட்டுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமருடன் இந்திய வீரர்கள் சந்திப்பு
Published on

சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் வரும் 3-ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி சிட்னி சென்றடைந்தது.

இந்நிலையில் சிட்னியில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய வீரர்கள் மரியாதை நிமித்தமாக ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து பிரதமர் ஆண்டனி, இந்திய அணி வீரர் விராட் கோலியிடம் செல்போனில் எதையோ காட்டியப்படி சிரித்து பேசினர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com