பயிற்சி செய்வதில் சிரமம்: இந்திய வீரர்கள் ஆதங்கம்

கேண்டியாக் பார்க் மைதானத்தில் போதுமான வசதிகள் இல்லை.இதனால் இந்திய வீரர்கள் பயிற்சிகள் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
பயிற்சி செய்வதில் சிரமம்: இந்திய வீரர்கள் ஆதங்கம்
Published on

நியூயார்க்:

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.

இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

டி20 உலகக் கோப்பை தொடருக்காக நியூயார்க், டல்லாஸ், புளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கிரிக்கெட் மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. பயிற்சி செய்வதற்காகவும் சில மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை தற்காலிக ஏற்பாடுகளாக மட்டுமே உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, இந்திய அணி வீரர்கள் அமெரிக்காவில் 4 நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சி செய்வதில் சிரமம் ஏற்படுவதாக இந்திய அணி வீரர்கள் குற்றம் சாட்டினர்.

கேண்டியாக் பார்க் பகுதியில் பயிற்சி மேற்கொள்ளும் பகுதிக்கும், இந்திய அணி விளையாட உள்ள மைதானத்திற்கும் இடையில் நீண்ட தூரம் இருக்கிறது.

பயிற்சிக்கு ஏற்றவாறு மைதானங்களில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. எல்லாமே தற்காலிக ஏற்பாடுதான். பிட்சில் இருந்து அனைத்துமே தற்காலிகமானது என இந்தியா சார்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com