பாபா இந்திரஜித், விஜய சங்கர் அபாரம்: முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291/4

முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியின் பாபா இந்திரஜித் சதமடித்து அசத்தினார்.
பாபா இந்திரஜித், விஜய சங்கர் அபாரம்: முதல் நாள் முடிவில் தமிழ்நாடு 291/4
Published on

சேலம்:

ரஞ்சி கோப்பை தொடரில் நடந்து முடிந்துள்ள 6 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாடு அணி 22 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், சி பிரிவில் உள்ள தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சேலத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ் 10 ரன்னிலும், பிரதோஷ் பால் 20 ரன்னிலும், ஜெகதீசன் 22 ரன்னிலும், முகமது அலி 27 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் பாபா இந்திரஜித் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். இவருக்கு விஜய் சங்கர் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி இதுவரை 184 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் நாள் முடிவில் தமிழ்நாடு அணி 4 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்துள்ளது. பாபா இந்திரஜித் 122 ரன்னும், விஜய் சங்கர் 85 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com