ரஞ்சி டிராபி இறுதி போட்டி: மத்தியபிரதேசம் முதல் முறையாக சாம்பியன் ஆகிறது

மத்திய பிரதேச அணியில் 3 வீரர்கள் சதம் அடித்து முத்திரை பதித்தனர்.முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.
ரஞ்சி டிராபி இறுதி போட்டி: மத்தியபிரதேசம் முதல் முறையாக சாம்பியன் ஆகிறது
Published on

பெங்களூரு:

மும்பை-மத்திய பிரரேச அணிகள் மோதும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.

மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. சர்பிராஸ்கான் சதம் (134 ரன்) அடித்தார். கவுரவ் யாதவ் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேசம் பதிலடி கொடுத்தது. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் மத்திய பிரதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேசம் அணி மும்பையின் ஸ்கோரை தாண்டி முன்னிலை பெற்றது. 155 ஓவர் வீசி முடிக்கப்பட்டபோது அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 473 ரன் குவித்து இருந்தது.

4-வது வீரராக களம் இறங்கிய ரஜத் படிதார் சதம் அடித்தார். தொடக்க வீரர் யாஷ் துபே, 3-வது வரிசையில் ஆடிய சுபம் சர்மா ஆகியோர் ஏற்கனவே சதம் அடித்து இருந்தனர். தற்போது மத்திய பிரதேச அணியில் 3-வது வீரர் செஞ்சுரி அடித்து முத்திரை பதித்தார்.

இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்பு இருக்கிறது. இதன் மூலம் முதல் இன்னிங்சில் பெற்ற கூடுதல் ரன் மூலம் மத்திய பிரதேச அணி முதல் முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com