3வது டெஸ்ட் போட்டி- ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட்

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.
3வது டெஸ்ட் போட்டி- ஆஸ்திரேலியாவின் அபார பந்து வீச்சில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட்
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதி வருகின்றன.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதனால் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை யில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன்கில் களம் இறங்கினர். முதல் ஓவரை மிட்டெல் ஸ்டார்க் வீசினார். இதில் முதல் பந்தில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் அவுட் கேட்கப்பட்டது. ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை.

அதன்பின் அல்ட்ரா எட்ஜில் பந்து பேட்டில் உரசி சென்றது தெரிய வந்தது. ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் பவுண்டரிகளை அடித்தனர். ஆனால் இந்த ஜோடி நிலைக்கவில்லை. குனேமேன் வீசிய 6வது ஓவரில் ரோகித் சர்மா (12 ரன்) ஸ்டம்பிங் ஆனார்.

அடுத்த புஜாரா களம் வந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான சுப்மன்கில் 21 ரன்னில் அவுட் ஆனார். அவர் குனேமேன் பந்தில் சுமித்திடம் கேட்ச் கொடுத் தார். அடுத்து புஜாராவுடன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா ஒரு ரன்னிலும், அடுத்து களம் ஜடேஜா 4 ரன்னிலும், நாதன் லயன் பந்திலும், ஸ்ரேயாஸ் அய்யர் ரன் எதுவும் எடுக்காமல் குனேமேன் பந்திலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இந்தியா 45 ரன்னுக்கு 5 விக்கெட்டை (11.2 ஓவர்) இழந்து திணறியது. 10 மணி நிலவரப்படி இந்தியா 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நிதானமாக ஆடி களத்தில் இருந்த விராட் கோலி 22 ரன்னிலும், பரத் 17 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மெதிவ் குஹ்னிமென் 3 விக்கெட்டையும், நாதன் லயன் 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். உணவு இடைவெளியின்போது, இந்திய அணி 26 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது.

இறுதியில், 33.2 ஓவரில் 109 ரன்கள் மட்டுமே எடுத்து இந்தியா ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மேதிவ் குஹ்னிமென் 5 விக்கெட்டுகளையும், நாதன் லயன் 5 விக்கெட்டையும், மொர்பி 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com