டி20 உலக கோப்பை: எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்
டி20 உலக கோப்பை:  எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
Published on

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 2-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் (நாளை) அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்து இருந்தது.

இந்நிலையில், டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

அணியில், குவிண்டின் டிகாக், மார்கோ யான்சன், ஹென்றிக் கிளாசன், டேவிட் மில்லர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், கேசவ் மகாராஜ், அன்ரிச் நார்ட்ஜே, ரபாடா, ஜெரால்ட் கோட்ஸி, தப்ரைஸ் ஷம்சி, ஒட்னியல் பார்ட்மேன், பிஜோர்ன் ஃபார்ட்யூன், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் காத்திருப்போர் பட்டியலில் பர்கர், லுங்கி இங்கிடி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com