டி20 உலகக்கோப்பைக்கான நடுவர்கள் அறிவிப்பு

இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது ரிச்சர்ட் கெட்டில்பரோ கொடுத்த ரியாக்‌ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
டி20 உலகக்கோப்பைக்கான நடுவர்கள் அறிவிப்பு
Published on

20 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இந்திய, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5-ந்தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான நடுவர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ் பிரவுன், தர்மசேனா, கஃபேனி, கோஃப், ஹோல்ட்ஸ்டாக், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், பலேக்கர், ரிச்சர்ட் கெட்டில்பரோ, மதனகோபால், மேனன், சாம் நோகஜ்ஸ்கி, அஹ்சன் ராசா, ரஷீத் ரியாஸ், ரீஃபெல், லாங்டன் ருசேர், ஷாஹித் சைகத், ராட் டக்கர், அலெக்ஸ் வார்ப், வில்சன் மற்றும் ஆசிப் யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நடுவர் என்றாலே இந்திய அணிக்கு நியாபகம் வருவது ரிச்சர்ட் கெட்டில்பரோ. அவர் நாக் அவுட் சுற்றில் இந்திய அணிக்கான போட்டியில் நடுவராக இருந்தால் அந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்தியா தோல்வியடைந்து விடும் என்று ரெக்கார்ட் சொல்கிறது.

குறிப்பாக 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் டோனி ரன் அவுட் ஆகும் போது இவர் கொடுத்த ரியாக்ஷன் இப்போது வரை மறக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் இவர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி சதம் அடிக்க இவர் காரணமாக திகழ்ந்தார்.

வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடிக்க 2 ரன்னும் அணியின் வெற்றிக்கு 2 ரன்னும் தேவை என்ற நிலையில் பந்து வீச்சாளர் வைடு வீசுவார். ஆனால் அதனை நடுவராக இருந்த ரிச்சர்ட் வைடு கொடுக்காமல் ஒரு ரியாக்ஷன் கொடுப்பார். அதுவும் யாராலும் மறந்திருக்க முடியாது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com