Video: டி20 உலகக் கோப்பையுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யகுமார்- கம்பீர்

Video: டி20 உலகக் கோப்பையுடன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யகுமார்- கம்பீர்
Published on
Summary

மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் உலகக் கோப்பையுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மும்பை:

2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் அசத்தினர். இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா 3-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் உலகக் கோப்பையுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் இவர்களுடன் சாமி தரிசனம் செய்தார்.

2024-ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றது. அப்போது உலகக் கோப்பையுடன் ஜெய் ஷா, ரோகித் சர்மா ஆகியோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com