ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் அடுத்த அவதாரம்

2023 சீசனில் ஸ்டீவன் சுமித் விளையாடவில்லை.2024 சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் அவர் ஏலம் எடுக்கவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ஸ்டீவன் சுமித்தின் அடுத்த அவதாரம்
Published on

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்டீவன் சுமித். சர்வதேச கிரிக்கெட்டில் அசத்தி வரும் இவரால், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைக்க முடியவில்லை. இதனால் ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.

இதன்காரணமாக 2024 சீசனுக்கான ஐபிஎல் ஏலத்தில் இவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. கடந்த முறையும் இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.

இந்த நிலையில் ஸ்டீவன் சுமித் அதிகாரப்பூர்வ ஆங்கில வர்ணனையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் முதன்முறையாக மைக் பிடித்து வர்ணனை செய்ய இருக்கிறார். இந்திய வீரர் முரளி கார்த்திக் இதற்கு முன்னதாக வியைளாடிக் கொண்டிருக்கும்போது வர்ணனை செய்துள்ளார். அதேபோல் சுமித் தற்போது வர்ணனையாளராக செயல்பட உள்ளார்.

இவருடன் ஹர்ஷா போக்லோ, சுனில் கவாஸ்கர், லட்சுமண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், நிக் நைட், பொம்மி பங்க்வா, டேனி மோரிசன், சைடன் டவுல், ஏபி டி வில்லியர்ஸ், மேத்யூ ஹெய்டன், தீப் தாஸ் குப்தா, அன்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், கெவின் பீட்டர்சன் ஆகியோர் ஆங்கில வர்ணனையாளர்களாக செயல்பட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com