

கடந்த 17 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் தனது பொறுப்பில் இருந்து கடந்த 13ம் தேதி விலகினார். அவரின் பங்களிப்பிற்கு நன்றியும், பாராட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2008-ம் ஆண்டில் இணைந்த ஸ்டீபன் பிளெமிங் 2009 முதல் தலைமை பயற்சியாளராக இருந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்லாமல் திணறி வரும் நிலையில், ஸ்டீபன் பிளெமிங் விலகியது பேசுபொருளானது.
இந்நிலையில், இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல், இங்கிலாந்து அணி கேப்டனாக ஜோ ரூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ஜோ ரூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பென் ஸ்டோக்ஸ் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை 122 டெஸ்ட் போட்டிகளுடன் முடித்துள்ளார். இதில் 44 போட்டிகளில் கேப்டனாக இருந்து 7,000-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்துள்ளார்.
200-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், இங்கிலாந்து அணிக்காக 114 ஒருநாள் போட்டிகளிலும், 43 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.