ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடி - இலங்கை வெற்றிபெற 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்

ஆசியக் கோப்பை சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்துள்ளது.
அதிரடியாக ஆடிய குர்பாஸ்
அதிரடியாக ஆடிய குர்பாஸ்
Published on

சார்ஜா:

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

இந்நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சார்ஜாவில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த இப்ராகிம் சட்ரான் 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com