

சட்டோகிராம்:
இலங்கை அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இலங்கை 2-1 என கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, வங்காளதேசம் முதலில் களமிறங்கியது. முதல் ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சவும்யா சர்க்கார், ஷாண்டோ ஜோடி நிதானமாக ஆடியது.
2வது விக்கெட்டுக்கு 70 ரன் சேர்த்த நிலையில் ஷாண்டோ 40 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுமையுடன் ஆடிய சவுமியா சர்க்கார் அரை சதம் கடந்து 68 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தவ்ஹித் ஹிருடோய் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து அரை சதம் கடந்தார்.
இறுதியில், வங்காளதேசம் அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது. ஹிருடோய் 96 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இலங்கை சார்பில் ஹசரங்கா 4 விக்கெட்டும், மதுஷனகா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறஙகுகிறது.