ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை: ஹசரங்கா அபார சாதனை

முதலில் ஆடிய ஜிம்பாப்வே 96 ரன்களில் சுருண்டது.இலங்கையின் ஹசரங்கா 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை: ஹசரங்கா அபார சாதனை
Published on

கொழும்பு:

இலங்கையில் பயணம் மேற்கொண்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி மழையால் ரத்தானது. 2-வது போட்டியில் இலங்கை போராடி வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. மழையால் இருதரப்புக்கும் தலா 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய ஜிம்பாப்வே இலங்கை பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை. குறிப்பாக, இலங்கை வீரர் ஹசரங்காவின் அபாரமாக பந்து வீசினார். இதனால் ஜிம்பாப்வே அணி 22.5 ஓவரில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்கா 5.5 ஓவரில் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டு எடுத்தார். இதன்மூலம் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் 7 விக்கெட் எடுத்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

அடுத்து ஆடிய இலங்கை 16.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்து வென்றதன் மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி இலங்கை கோப்பையை வென்று அசத்தியது. கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி 66 ரன்கள் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com