இப்ராகிம் சட்ரன் போராட்டம் வீண்: முதல் டி20 போட்டியில் இலங்கை திரில் வெற்றி

இரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.
இப்ராகிம் சட்ரன் போராட்டம் வீண்: முதல் டி20 போட்டியில் இலங்கை திரில் வெற்றி
Published on

தம்புள்ளா:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.

இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 19 ஓவரில் 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் ஹசரங்கா 67 ரன்கள் எடுத்தார்.

ஆப்கானிஸ்தான் சார்பில் பரூக்கி 3 விக்கெட்டும், நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 161 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. கேப்டன் இப்ராஹிம் சட்ரன்

மட்டும் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார்.

கடைசி ஓவரில் வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் மதீஷா பதிரனா 4 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com