மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இலங்கை போட்டி

கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோத இருந்தது. கனமழை பெய்ததால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது.
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் கைவிடப்பட்ட ஆஸ்திரேலியா- இலங்கை போட்டி
Published on

13-வது மகளிர்உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் கொழும்பில் இன்று நடைபெற இருந்த 5-வது லீக்கில் நடப்பு சாம்பியனான அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கையை எதிர்கொள்ள இருந்தது.

இந்த நிலையில் கனமழை பெய்ததால் டாஸ் கூட போட முடியாமல் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com