ருத்ர தாண்டவமாடிய திலக் வர்மா, சஞ்சு சாம்சன்: இந்தியா 283 ரன்கள் குவிப்பு

டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 283 ரன்களைக் குவித்தது. திலக் வர்மா, சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி சதமடித்தனர்.
ருத்ர தாண்டவமாடிய திலக் வர்மா, சஞ்சு சாம்சன்: இந்தியா 283 ரன்கள் குவிப்பு
Published on

ஜோகனஸ்பெர்க்:

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 4வது டி20 போட்டி ஜோகனஸ்பெர்கில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 36 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய திலக் வர்மா சஞ்சு சாம்சனுடன் இணைந்து தூள் கிளப்பினார். பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

சஞ்சு சாம்சன் 51 பந்தில் சதமடித்தார். அவரை தொடர்ந்து திலக் வர்மா 41 பந்தில் சதமடித்தார்.

இறுதியில், இந்திய அணி ஒரு விக்கெட்டுக்கு 283 ரன்களைக் குவித்தது. சஞ்சு சாம்சன் 109 ரன்னும், திலக் வர்மா 120 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இதையடுத்து, 284 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com