திலக் வர்மா அசத்தல் சதம்: 3வது டி20 போட்டியில் இந்தியா 219 ரன்கள் குவிப்பு

முதலில் பேட் செய்த இந்தியா 219 ரன்களைக் குவித்தது. இந்திய அணியின் திலக் வர்மா சதமடித்து அசத்தினார்.
திலக் வர்மா அசத்தல் சதம்: 3வது டி20 போட்டியில் இந்தியா 219 ரன்கள் குவிப்பு
Published on

செஞ்சூரியன்:

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3வது டி20 போட்டி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்தில் சஞ்சு சாம்சன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

2வது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும், பாண்ட்யா 18 ரன்னிலும், ரிங்கு சிங் 8 ரன்னிலும் வெளியேறினர்.

அதிரடியைத் தொடர்ந்த திலக் வர்மா முதல் சதமடித்து அசத்தினார்.

இறுதியில், இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களை குவித்தது. திலக் வர்மா 107 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து 220 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com