முதல் ஒருநாள் போட்டி: சதம் விளாசிய அசலங்கா- வங்கதேச அணிக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை

இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார்.வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.
முதல் ஒருநாள் போட்டி: சதம் விளாசிய அசலங்கா- வங்கதேச அணிக்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
Published on

கொழும்பு:

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா களமிறங்கினர். இதில் மதுஷ்கா 6 ரன்னிலும், பதும் நிசாங்கா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் குசல் மெண்டிஸ் 45 ரன், ஜனித் லியானகே 29 ரன், ரத்னநாயகே 22 ரன், வனிந்து ஹசரங்கா 22 ரன், காமிந்து மெண்டிஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சரித் அசலங்கா சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com