கெய்க்வாட் அபார சதம்: இலங்கை ஏ வெற்றிபெற 278 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா ஏ

கெய்க்வாட், திலக் வர்மா ஜோடி 4வது விக்கெட்டுக்கு 150 ரன்களை சேர்த்தது.
tilak varma, rutraj
Published on

இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை, இந்தியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரப்சிம்ரன் சிங் 2 ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி 14 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பிரியான்ஷ் ஆர்யா 32 ரன்னில் வெளியேறினார்.

தொடர்ந்து இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 150 ரன்களை சேர்த்தது.

சிறப்பாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 101 ரன்னில் அவுட்டானார். திலக் வர்மா 60 ரன்னில் வெளியேறினார். ஆயுஷ் பதோனி 24 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. சூர்யான்ஷ் ஷெட்கே 26 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இலங்கை அணி சார்பில் முகமது ஷிராஸ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com