இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ராசா தலைமையில் இளம் படையை அறிவித்த ஜிம்பாப்வே

இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ராசா தலைமையில் இளம் படையை அறிவித்த ஜிம்பாப்வே
Published on

இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் டி20 தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டது. இந்த இளம் ஜிம்பாப்வே அணியின் கேப்டனாக அனுபவம் வாய்ந்த வீரர் சிக்கந்தர் ராசா நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பைக்கு இந்த அணி தகுதி பெறத் தவறியதால், புதிய தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் சம்மன்ஸின் கீழ் மீண்டும் கட்டமைக்கும் நோக்கத்தில், ஜிம்பாப்வே ராசாவின் கீழ் ஒரு இளம் அணியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஜிம்பாப்வே அணி:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), அக்ரம் ஃபராஸ், பென்னட் பிரையன், கேம்ப்பெல் ஜொனாதன், சதாரா டெண்டாய், ஜாங்வே லூக், கையா இன்னசென்ட், மடண்டே கிளைவ், மாதேவெரே வெஸ்லி, மருமணி தடிவானாஷே, மசகட்சா வெலிங்டன், மவுடா பிராண்டன், முசரபானி பிளஸ்ஸிங், மியர்ஸ் டியான், நக்வி ஆன்டம், ங்கரவா ரிச்சர்ட், ஷும்பா மில்டன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com