பாபர் ஆசமின் உலக சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்

இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்
பாபர் ஆசமின் உலக சாதனையை சமன் செய்த ஷுப்மன் கில்
Published on

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com