உலகக் கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த ஷ்ரேயாஸ் -ராகுல் ஜோடி

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார்.
உலகக் கோப்பை தொடரில் புதிய சாதனை படைத்த ஷ்ரேயாஸ் -ராகுல் ஜோடி
Published on

நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யர்-லோகேஷ் ராகுல் ஜோடி 208 ரன் குவித்தது. உலகக் கோப்பையில் 4-வது விக்கெட்டுக்கு இது புதிய சாதனையாகும்.

இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையில் நெதர்லாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் மைக்கேல் கிளார்க்-பிராட் ஹோட்ஜ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 204 ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை ஸ்ரேயாஸ் அய்யர்-ராகுல் ஜோடி முறியடித்தது.

ராகுல் 62 பந்தில் சதம் அடித்தார். இது உலகக் கோப்பையில் இந்திய வீரர்களின் அதிவேக சதமாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா 63 பந்தில் சதம் அடித்திருந்தார். அதை ராகுல் முறியடித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com