சானியா மிர்சாவுடன் விவாகரத்தா? வதந்திகள் குறித்து மவுனம் கலைத்த சோயிப் மாலிக்

கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை.இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.
சானியா மிர்சாவுடன் விவாகரத்தா? வதந்திகள் குறித்து மவுனம் கலைத்த சோயிப் மாலிக்
Published on

கராச்சி:

இந்திய டென்னிஸ் நட்சத்திரமான சானியா மிர்சா கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இஷான் என்ற மகன் உள்ளார். கடந்த 6 மாதங்களாக சானியா, சோயிப் மாலிக் ஜோடியாக பொது வெளியில் சென்றதில்லை. இதனால் இவர்கள் விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்தன.

இந்நிலையில், தானும் தனது மனைவியும் எந்தவித விவாகரத்து நடவடிக்கையிலும் இல்லை எனவும் தாங்கள் பிரிந்திருக்கவும் இல்லை என்றும் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

ரம்ஜான் பெருநாளை எனது மனைவி மற்றும் மகனுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவர்கள் வெளியூரில் இருக்கிறார்கள்.

அனைத்து திருமணங்களும் ஏற்றத் தாழ்வுகளை கடந்து செல்கின்றன. ஆனால் அதற்காக உறவு முடிந்துவிட்டது என்று அர்த்தம் இல்லை. நானும், சானியாவும் சர்வதேச விளையாட்டுடன் தொடர்பில் இருப்பதால் பிசியான அட்டவணையை கொண்டுள்ளோம். இதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக இருப்பதை பார்க்க முடிவதில்லை. எங்களுக்குள் பிரிவினை மற்றும் கருத்துவேறுபாடுகள் என வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை.

என சோயிப் மாலிக் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com