ரொம்ப கஷ்டப்பட்டேன், சூர்யவன்ஷி அந்த விஷயத்தில் சூப்பர் - பாராட்டிய ஷேன் வாட்சன்

இந்திய தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் வயது வீரர் என்ற பெருமை.
Shane Watson & Vaibhav Sooryavanshi
Published on

இளம் இந்திய பேட்டர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான, ஆட்டம் மற்றும் அசாத்திய திறமையை ஷேன் வாட்சன் பாராட்டியுள்ளார். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பந்தை சக்திவாய்ந்து அடிக்கும் திறனையும், களத்தில் அவர் காட்டும் அச்சமற்ற அணுகுமுறையையும் சிறப்பாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டரான ஷேன் வாட்சன், இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட டி20ஐ கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரின் ஆஃப் சைடில் ரன்கள் குவிக்கும் திறனையும், மேலும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வேகமாற்ற யார்க்கர் வீசும் திறனையும் வெகுவாகப் பாராட்டினார்.

மும்பையில் உள்ள பி.கே.சி., ஜியோ வொர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற கபுனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வாட்சன், தற்போதைய இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து தான் பெற விரும்பும் மூன்று குணங்களை பற்றித் தெரிவித்தார்.

"முதலாவதாக, வைபவ் சூர்யவன்ஷி. அவரிடம் மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் அபாரமான சக்தி உள்ளது. அது நேராகவோ அல்லது லெக் சைடிலோ மட்டுமல்ல, ஆஃப் சைடிலும் செல்லும்.

அதோடு, வைபவின் அச்சமற்ற மனப்பான்மையும் ஒரு காரணம். ஆட்டமிழப்பதைப் பற்றி அவருக்கு எந்த பயமும் இல்லை. என் கிரிக்கெட் வாழ்க்கையின் கணிசமான பகுதியில் நான் இந்த விஷயத்தில்தான் மிகவும் சிரமப்பட்டேன்," என்று ஏ.என்.ஐ-க்கு பகிர்ந்த வீடியோவில் அவர் கூறினார்.

முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டார்.

இதன் மூலம் அவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 36 ஆண்டுகளுக்கு முன்பு வைத்திருந்த சாதனையை முறியடித்து, இந்திய தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டெண்டுல்கர் தனது 16 வயதில், 1989-இல் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணிக்காக அறிமுகமாகி, மிக நீண்ட காலம் நிலைத்திருந்த ஒரு சாதனையை படைத்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com