ஒருநாள் கேப்டன் பதவி: ஷகிப் அல் ஹசன் பதிலுக்காக காத்திருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம்

கேப்டன் பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர். ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
ஒருநாள் கேப்டன் பதவி: ஷகிப் அல் ஹசன் பதிலுக்காக காத்திருக்கும் வங்காளதேச கிரிக்கெட் வாரியம்
Published on

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான அணிகளை அறிவிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் வங்காளதேச அணி கேப்டன் யார் என்பது குறித்து பிசிபி இன்னும் வரை அறிவிக்கவில்லை. அந்த பதவிக்கு ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் போட்டியில் உள்ளனர்.

இது குறித்து பிசிபி தலைவர் நஸ்முல் கூறியதாவது:-

இன்னும் சில நாட்களில் அணியை அறிவிப்போம். கேப்டனையும் அறிவிப்போம் என்றார். மேலும் ஷகிப்பை ஒருநாள் கேப்டனாக தேர்ந்தெடுப்பது எளிதான முடிவு என்றும் ஷகிப்பின் இறுதி முடிவுக்காக பிசிபி காத்திருக்கும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com