இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர்- வைரலாகும் புகைப்படம்

ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய கொடியில் ஆட்டோகிராப் போட்ட பாகிஸ்தான் வீரர்- வைரலாகும் புகைப்படம்
Published on

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.

இந்நிலையில் சிட்னியில் ரசிகர்களுடன் உரையாடிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாஹின் அப்ரிடி, இந்திய ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியில் ஆட்டகிராப் போட்டுள்ளார். இந்த புகைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஷாஹீன் ஷா அப்ரிடி இந்தியக் கொடியில் இந்திய ரசிகருக்கு ஆட்டோகிராப் போட்டார். இதற்கு, ஷஹீன் தனது வருங்கால மாமனாரான பாகிஸ்தான் முன்னாள் கேப்டனான ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

சாஹீன் ஷாவுக்கும் ஷாஹித் அப்ரிடியின் மகளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து விரைவில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com