

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் க்ரூப் 1-இல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. பர்மிங்காமில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதில் இந்திய அணி பேட்டர் ஷபாலி வர்மாவின் ஆட்டம் வெறும் ஐந்து பந்துகள் மட்டுமே நீடித்தது. ஆனால், மகளிர் டி20 உலக கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே சிக்சர் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவதற்கு அது போதுமானதாக இருந்தது. வர்மா முதல் பந்திலேயே சாடியா இக்பாலுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்.
இருப்பினும், அதே பந்துவீச்சாளரால் அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷபாலி வர்மா ஆட்டமிழந்தார். பின்னர், நடந்த மகளிர் டி20 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக, ஸ்மிருதி மந்தனாவின் கம்பீரமான 44 பந்துகளில் 68 ரன்களும், ரிச்சா கோஷின் அதிரடி ஆட்டமும் இணைந்து இந்தியாவை 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் என்ற போராடும் ஸ்கோரை எட்ட வைத்தது.
171 ரன்களை துரத்திய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு இந்திய மகளிர் அணி துவக்கம் முதலே கடும் சேதத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பாகிஸ்தான் அணி 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.