தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இரட்டை சதமடித்தார் ஷபாலி வர்மா

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இரட்டை சதமடித்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: இரட்டை சதமடித்தார் ஷபாலி வர்மா
Published on

சென்னை:

இந்தியா- தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோம் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மந்தனா-ஷபாலி வர்மா ஜோடி 90 வருட பெண்கள் கிரிக்கெட்டில் அரிய சாதனையை படைத்துள்ளது.

இந்நிலையில், ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி இரட்டை சதமடித்து அசத்தினார். அவர் 205 ரன்னில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 411 ஆக இருந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com