இரட்டை சதம் விளாசிய சேவாக் மகன்

229 பந்துகளில் இரட்டை சதம் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.அவரது ஸ்கோரில் 34 பவுண்டரி, 2 சிக்சர்கள் அடங்கும்.
இரட்டை சதம் விளாசிய சேவாக் மகன்
Published on

கூச் பெஹார் கோப்பைக்கான (19 வயதுக்கு உட்பட்டோர்) கிரிக்கெட்டில் மேகாலயா- டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் (4 நாள் ஆட்டம்) மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த மேகாலயா 104.3 ஓவர்களில் 260 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2-வது நாள் முடிவில் 81 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 468 ரன் குவித்து 208 ரன் முன்னிலை பெற்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இந்திய முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கின் மகனான ஆர்யவீர் 34 பவுண்டரி, 2 சிக்சருடன் 200 ரன்கள் விளாசி (229 பந்து) களத்தில் உள்ளார்.

17 வயதான ஆர்யவீர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்து வருவதாக ஏற்கனவே சேவாக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை முச்சதம் விளாசிய ஒரே இந்திய வீரர் சேவாக் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com