மேஜர் லீக் கிரிக்கெட்: குவாலிபையர் சுற்றில் தோல்வியடைந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்

டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது.சியாட்டில் ஓர்காஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
மேஜர் லீக் கிரிக்கெட்: குவாலிபையர் சுற்றில் தோல்வியடைந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
Published on

டல்லாஸ்:

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

அதன்படி களமிறங்கிய டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சியாட்டில் ஓர்காஸ் அணி களம் இறங்கியது.

சியாட்டில் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சியாட்டில் ஓர்காஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சியாட்டில் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் 2-ம் இடம் பிடித்த டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. டெக்சாஸ் அணி தனது அடுத்த ஆட்டத்தில் எம்.ஐ நியூயார்க் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com