விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப்

இந்திய வீரர் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. முசீர் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியது.
விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப்
Published on

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நேற்று நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று இரண்டாம் நாள் ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் சர்பராஸ் கானை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. அதே சமயம் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.30 லட்சம் கொடுத்து வாங்கியது.

X

Maalai Malar
www.maalaimalar.com