Abhishek Sharma | பைனல் அவருடையதுதான்..! அபிஷேக் சர்மாவுக்கு சஞ்சு சாம்சன் ஆதரவு

அபிஷேக் சர்மா 7 போட்டிகளில் 89 ரன்களே அடித்துள்ளார்.அதில் ஒரு போட்டியில் 55 ரன்கள் அடிததுள்ளார்.
Abhishek Sharma | பைனல் அவருடையதுதான்..! அபிஷேக் சர்மாவுக்கு சஞ்சு சாம்சன் ஆதரவு
Published on

டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவித்ததால், அவர் மீது அதிக நம்பிக்கை இருந்தது.

முதலில் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். இவர்களைத் தொடர்ந்து திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே போன்ற பேட்டிங் பட்டாளங்களால் இந்தியா 300 ரன்களை குவிக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

ஆனால், அபிஷேக் சர்மா டி20 உலகக் கோப்பையில் மோசமாக சொதப்பி வருகிறார். ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார்.

7 போட்டிகளில் விளையாடி 89 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் அதிபட்சமாக 55 ரன்கள் ஆகும். நேற்றைய அரையிறுதி போட்டிகளில் கூட 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.

அவர் அணியில் வைத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பேச்சுவார்த்தை ரசிகர்களிடையே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் அணி நிர்வாகம் அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டி அபிஷேக் சர்மாவிடம் சிறந்த நாளாக இருக்கும் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

மேலும், நான் விளையாடும் முதல் இறுதிப் போட்டி இதுவாகும். என்னுடைய வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் இது ஒன்று எனவும் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com