ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்த தமிழக வீரர் உள்பட 3 இளம் வீரர்கள்

ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
ஜிம்பாப்வே தொடரில் இடம்பிடித்த தமிழக வீரர் உள்பட 3 இளம் வீரர்கள்
Published on

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com