சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது- பிசிசிஐ

இந்திய அணிக்காக பல சாதனைகளை சச்சின் படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாச முடியும் என்பதை உலகுக்கு முதன் முதலில் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது- பிசிசிஐ
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாச முடியும் என்பதை உலகுக்கு முதன் முதலில் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணிக்காக டெஸ்ட்டில் 200 போட்டிகளும் ஒருநாளில் 463 போட்டிகளிலும் ஒரு டி20 போட்டிகளிலும் விளையாடி அதிக டெஸ்ட் மற்றும் ஒருநாள் ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை சச்சின் படைத்துள்ளார். இதில் டெஸ்ட்டில் 51 சதங்களும் ஒருநாள் போட்டியில் 49 சதங்களும் விளாசியுள்ளார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு முக்கிய உறுப்பினராகவும் இருந்தார், 

இந்நிலையில் இந்திய அணிக்காக பல சாதனைகள் படைத்த ஜாம்பவான் சச்சினுக்கு 2024-ம் ஆண்டின் சிகேநாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை பிசிசிஐ வழங்கவுள்ளது. மும்பையில் நாளை நடைபெறும் பிசிசிஐ-ன் 'நமன்' விருதுகள் நிகழ்ச்சியில் இந்த விருது அவருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com