இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்- தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து மார்க்ரம் விலகல்

மார்க்ரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்தியாவுக்கு எதிராக மூன்று போட்டிகளில் அவர் விளையாடவில்லை.
மார்க்ரம் 
மார்க்ரம் 
Published on

பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி நாளை நடைபெறுகிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் இருந்து விலகியுள்ளார் முதல் 20 ஓவர் போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் 7 நாட்கள் தனிமைபடுத்துலில் இருந்தார்.

இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com