மேக்ஸ்வெல், டூ பிளசிஸ் அபாரம் - ராஜஸ்தான் வெற்றிபெற 190 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு

முதலில் ஆடிய பெங்களூரு 189 ரன்கள் குவித்தது. டூ பிளசிஸ், மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தனர்.
மேக்ஸ்வெல், டூ பிளசிஸ் அபாரம் - ராஜஸ்தான் வெற்றிபெற 190 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு
Published on

பெங்களூரு:

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

பெங்களூருவில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஷாபாஸ் அகமது 2 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டூ பிளசிசுடன் இணைந்து அதிரடியாக ஆடினார். இருவரும் பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.

3வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்த நிலையில் டூ பிளசிஸ் ஆட்டமிழந்தார். அவர் 39 பந்தில் 2 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

அவரை தொடர்ந்து ருத்ர தாண்டவமாடிய மேக்ஸ்வெல் 44 பந்தில் 4 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

லாம்ரோர் 8 ரன்னில் அவுட்டானார். பிரபு தேசாய் டக் அவுட்டானார்.

இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் போல்ட், சந்தீப் சர்மா 2 விக்கெட், அஷ்வின், சஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com