இழந்த ஃபார்மை மீட்க யுவராஜ் சிங்கிடம் பயிற்சி எடுத்த ரிஷப் பண்ட்..!

ரிஷப் பண்ட் ஃபார்ம் இன்றி தவித்து வருவதால் டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை.ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற முனைப்பில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இழந்த ஃபார்மை மீட்க யுவராஜ் சிங்கிடம் பயிற்சி எடுத்த ரிஷப் பண்ட்..!
Published on

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரிஷப் பண்ட். அதிரடி வீரரான ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தில் சமீப காலமாக தொய்வு ஏற்பட்டது. இதனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

வருகிற 28-ந்தேதி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்குகிறது. ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். இழந்த ஃபார்மை ஐபிஎல் மூலம் மீட்டெடுக்க தீவிர பயிற்சி மேற்கெண்டு கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்கிடம், சிறப்பாக விளையாடுவதற்கான டிப்ஸை பெற்றுள்ளார். யுவராஜ் சிங்கியும் அவருக்கு பயிற்சி கொடுத்துள்ளார்.

இந்த அணியில் விளையாடும் அபிஷேக் சர்மா, யுவராஜ் சிங்கிடம் அடிக்கடி ஆலோசனை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com