ஐபிஎல் மைதானத்தில் ரிஷப் பண்ட் - பரவசத்தில் ரசிகர்கள்

டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது.டெல்லி அணியின் வார்னர் 37 ரன்னில் அவுட்டானார்.
ஐபிஎல் மைதானத்தில் ரிஷப் பண்ட் - பரவசத்தில் ரசிகர்கள்
Published on

புதுடெல்லி:

16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த முறை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் போட்டிகள் நடைபெறுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி அணி ஆடிக் கொண்டிருந்த போது விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் திடீரென மைதானத்துக்கு காரில் வந்தார்.

அவர் மைதானத்தில் அமர்ந்து போட்டியை கண்டு களித்தார். ரிஷப் பண்டை பார்த்த ரசிகர்கள் ஆரவார கோஷமிட்டனர். ரசிகர்களைப் பார்த்து ரிஷப் பண்ட் கையசைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com