இந்திய வீரர் ரிங்கு சிங் தந்தை காலமானார்

இன்று அதிகாலை சுமார் 5:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி ரிங்கு சிங் தந்தை காலமானார். ரிங்கு சிங்கின் தந்தையின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய வீரர் ரிங்கு சிங் தந்தை காலமானார்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங். அவரது தந்தை கன்சந்த் சிங், நீண்ட நாட்களாக கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நோய்டாவில் உள்ள யதார்த் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 5:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

ரிங்கு சிங்கின் தந்தையின் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வரும் மார்ச் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக ரிங்கு சிங் மீண்டும் அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டிக்காக பயிற்சியில் இருந்த அவர், தந்தையின் உடல்நிலை கவலைக்கிடமான தகவலை அடுத்து கடந்த பிப்ரவரி 24 அன்று அவசரமாக வீடு திரும்பினார். பின்னர் ஜிம்பாப்வே போட்டிக்கு திரும்பிய அவர், மாற்று வீரராக களமிறங்கிய நிலையில், தற்போது தந்தையின் மறைவுச் செய்தியை அடுத்து மீண்டும் அலிகார் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com