ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை

மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின.ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.
ரஞ்சி கோப்பை: தமிழ்நாட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை
Published on

ரஞ்சி கோப்பை அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியது.

ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின. மும்பையில் தொடங்கிய 2-வது அரையிறுதியில் தமிழ்நாடு, மும்பை அணிகள் விளையாடின. டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி தமிழ்நாடு அணி முதலில் களமிறங்கியது. அதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மும்பை அணியின் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், ஷர்துல் தாக்குர், முஷீர் கான், தனுஷ் கோட்டியான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சில் களமிறங்கிய மும்பை அணி 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 109 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

பின்னர் 232 ரன்கள் பின்தங்கிய நிலைமையில் தனது 2-வது இன்னிங்சில் தமிழ்நாடு அணி களமிறங்கியது. மும்பை அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த தமிழ்நாடு அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 70 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது தமிழ்நாடு.

இதன் மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் 47வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி மும்பை அணி அசத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com