பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி - சதமடித்த ரச்சின் ரவீந்திரா

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில் கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.சிறப்பாக ஆடிய ரச்சின் ரவீந்திரா சதமடித்து அசத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி - சதமடித்த ரச்சின் ரவீந்திரா
Published on

பெங்களூரு:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்த நிலையில், கான்வே 35 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் ரச்சின் ரவீந்திராவுடன் இணைந்தார். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி, சிறிது நேரத்துக்குப் பிறகு அதிரடியாக ஆடியது. ரவீந்திரா மற்றும் வில்லியம்சன் அரை சதம் கடந்தனர்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

உலக கோப்பை தொடரில் ரவீந்திரா அடிக்கும் 3வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com