அபிஷேக் சர்மாவை பவுலர் என பச்சையாக புளுகிய பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்- யுவராஜ் தந்தை வெளியிட்ட பகீர் தகவல்

ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும். இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது.சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.
அபிஷேக் சர்மாவை பவுலர் என பச்சையாக புளுகிய பஞ்சாப் கிரிக்கெட் சங்கம்- யுவராஜ் தந்தை வெளியிட்ட பகீர் தகவல்
Published on

ஐபிஎல் தொடரிலும், இந்திய டி20 அணியிலும் அதிரடி பேட்ஸ்மேனாக அபிஷேக் ஷர்மா இருந்து வருகிறார். அவரை தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வளர்த்து விட்டவர் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்.

இந்நிலையில் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் அபிஷேக் ஷர்மா ஒரு பவுலர் எனக் கூறி அவரது பேட்டிங் திறமையை மறைக்கப் பார்த்ததாக யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்த யோக்ராஜ் சிங் கூறியதாவது:-

அபிஷேக் ஷர்மா அப்போது இரவு நேரப் பார்ட்டிகள், பெண் தோழிகள் என்று இருந்தார். யுவராஜ் சிங் அபிஷேக்கின் தந்தையிடம் அபிஷேக் ஷர்மாவை வீட்டிலேயே அடைத்து வையுங்கள் என்றார். ஆனால், அவரது தந்தையால் அபிஷேக் ஷர்மாவை கையாள முடியவில்லை. அதன் பின்னர் யுவராஜ் சிங் தனது கட்டுப்பாட்டில் அபிஷேக் ஷர்மாவை கொண்டு வந்தார்.

அதன்பிறகு பஞ்சாப் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அபிஷேக்கின் திறமையை மறைக்க முயன்றனர். நாங்கள் அபிஷேக் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பற்றி பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்திலும் அதன் பயிற்சியாளர்களிடமும் விசாரித்தோம். அப்போது அவர்கள் இவர் ஒரு பந்துவீச்சாளர். இவர் பந்துவீச மட்டும் தான் செய்வார்.

உடனே யுவராஜ் சிங் அவரது ரெக்கார்டை எடுத்து காட்டுங்கள் என்றார். அந்த ரெக்கார்டை எடுத்த பார்த்த போது, அவர் அப்போதே 24 சதங்களை அடித்திருந்தார். ஏன் தவறான தகவல்களை கொடுக்கிறீர்கள்? இந்த பையன் 24 சதங்களை அடித்து இருக்கிறான் என்றார். இந்த சம்பவம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.

ஒரு வீரரைப் பற்றி சரியான தகவல்களைப் பகிர வேண்டும். இதுதான் இங்கே பிரச்சினையாக உள்ளது. சிலர் பொறாமையின் காரணமாக சில வீரர்களின் வாழ்க்கையை முடித்துவிடப் பார்க்கிறார்கள்.

என்று யோக்ராஜ் சிங் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com