குஜராத் அணியின் ஆலோசகராக பார்த்திவ் படேல் நியமனம்

கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பார்த்திவ் படேல் பணியாற்றி உள்ளார்.
குஜராத் அணியின் ஆலோசகராக பார்த்திவ் படேல் நியமனம்
Published on

மும்பை:

ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஏராளமான அணிகளில் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். லக்னோ, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி ஆகிய அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2022-ம் ஆண்டு அறிமுகமான முதல் தொடரிலேயே சாம்பியன் பட்டத்தை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக இருந்த கேரி கிர்ஸ்டன், தற்போது பாகிஸ்தான் அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இதனால் அவரது இடத்திற்கு இந்திய முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பார்த்திவ் படேல், கடந்த 4 ஆண்டுகளாக மும்பை அணியின் ஸ்கவுட்டிங் குழுவில் இடம்பெற்றிருந்தார். மும்பை அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தார்.

தற்போது குஜராத் அணியில் பார்த்திவ் படேல் இணையவுள்ளதால், மும்பை அணியுடனான 4 ஆண்டு கால பயணம் முடிவுக்கு வரவுள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி உள்ளிட்ட ஏராளமான அணிகளுடன் பணியாற்றிய அனுபவம் கொண்ட பார்த்திவ் படேல், குஜராத் அணியில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதில் முக்கிய நபராக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com