மசூத்- சபீக் சதம்: இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மசூத்- சபீக் சதம்: இங்கிலாந்துக்கு எதிராக முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 328 ரன்கள் குவிப்பு
Published on

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபீக்- சைம் அயூப் களமிறங்கினர். சைம் அயூப் 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஷான் மசூத், ஷபீக்குடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பொறுப்புடன் விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்தினர். ஷபீக் 102 ரன்கள் எடுத்த போது ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் மசூத் 151 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து பாபர் அசாம்- சகீல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். முதல் நாள் ஆட்டம் முடிவடைய 2 ஓவர்கள் இருந்த நிலையில் பாபர் அசாம் 71 பந்தில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 328 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com